Our Feeds


Saturday, April 20, 2024

ShortNews Admin

ஈரான் - இஸ்ரேல் மோதல் | இலங்கை பொருளாதாரத்திற்கு பாரிய ஆபத்து!



ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுடன் மோதல்கள் தொடருமானால், ஈரானுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.


எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்வதாகவும், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது.


அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது. இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஈரான் 61வது இடத்தில் உள்ளது.


ஈரான் மீது இஸ்ரேல் நேற்று (19) ஏவுகணை தாக்குதல் நடத்தியது. மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் மாகாணத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஈரானின் உள்நாட்டு பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.


மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஈரான் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.


இஸ்ரேல் சமீபத்தில் லிபியாவில் உள்ள ஈரான் துணை தூதரகத்தை தாக்கி இராணுவ தளபதிகள் உட்பட பதின்மூன்று பேரை கொன்றது.


இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது சுமார் 300 ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. நேற்று ஈரான் மீது இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும், போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »