தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையை விட சிறந்த தேசிய அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் ஆட்பதிவு திணைக்களத்தின் புதிய மத்திய மாகாண அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதற்கான டெண்டர் திறக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையின் பார்கோடு நீக்கப்பட்டு, QR Code கொண்ட புதிய அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்கு 340 இடங்கள் உள்ளதாகவும், அரசாங்கத்திற்கு நிதிப் பிரச்சினைகள் இருந்தாலும், நாடு முழுவதும் அதிகளவான அலுவலகங்கள் திறக்கப்பட்டு மக்களுக்கு சேவைகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் அங்கு வலியுறுத்தினார்.