Our Feeds


Tuesday, May 28, 2024

SHAHNI RAMEES

11வது உலக நீர் மன்றத்தை சவூதி நடாத்தத் தீர்மானம்...!



 11 வது உலக நீர் மன்றத்தை 2027ஆம் ஆண்டில் சவூதி அரேபியா

நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது இந்தோனேசியாவில நடைபெற்ற உலக நீர் மன்றத்தின் 10 வது அமர்வின் நிறைவ விழாவின் போது அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்கும் நாடுகளின் தலைவர்கள் அமைச்சர்கள் 160 நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் பல்வேறு சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

11வது உலக நீர் மன்றம் ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான நடவடிக்கை என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளதோடுஇ உலகளாவிய நீர் சார்ந்த பிரச்சினைகளை அனுகுவதிலும் பிராந்திய மற்றும் சர்வதேச நீர் முன்முயற்சிகளை ஆதரிப்பதிலும் மற்றும் சவூதி அரேபியாவின் விஷன் 2030 திட்டத்துடன் இணைந்த நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கி செயல்படுவதிலும் அந்நாட்டுத் தலைமையின் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.

அந்நாட்டுச் சுற்றுச்சூழல் அமைச்சர் அப்துல் ரஹ்மான் அல்-ஃபத்லி இது பற்றி கருத்து தெரிவிக்கையில் சவூதி தலைமையின் குறிப்பிடத்தக்க ஆதரவும் வழிகாட்டல்களும் நீர் துறையில் சவூதியின் தரத்தை சர்வதேச ரீதியாக உயர்த்தியுள்ளது இது குறிப்பிடத்தக்க இந்த உலகளாவிய மன்றத்தை நடத்துவதற்கான வாய்ப்பிற்கு வழிவகுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய நீர் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்காக சர்வதேச ஆதரவைப் பெறவும் சர்வதேச நிறுவனங்களுடன் ஒத்துழைக்கவும் ரியாத் நகரில் உள்ள உலக நீர் அமைப்பை அந்நாட்டு பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறுவியமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »