Our Feeds


Saturday, May 4, 2024

Zameera

கத்தாரில் நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் 2வது முறையாக சாம்பியன்!



ஆசிய கால்பந்து கூட்டமைப்பினால் 6 ஆவது முறையாக நடத்தப்படும் 2024 ம் ஆண்டுக்கான 23 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றது.

இப்போட்டிகள் ஏப்ரல் மாதம் 15ம் திகதி ஆரம்பித்து மே மாதம் 3ம் திகதி இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த 16 நாடுகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு மொத்தமாக 32 போட்டிகள் நடைபெற்றது.

ஜப்பான் மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையிலான இறுதி போட்டி 3ம் திகதி ஜாசிம் பின் ஹமாத் மைதானத்தில் இடம்பெற்றது.  1-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி 2 வது முறையாக ஜப்பான் அணி சாம்பியனானது.

2016 இல் கத்தாரில் நடைபெற்ற போட்டியில் ஜப்பான் அணி சாம்பியனானது குறிப்பிட்டத்தக்கது.

தொடரில் விருதுகளை தட்டிச்சென்ற வீரர்கள் குறித்த விவரம்.

1.சிறந்த வீரருக்கான விருதை‌ ஜப்பான் கேப்டன் ஜோயல் சிமா புஜிடா பெற்றார்.

2.சிறந்த கோல் கீப்பர் விருதை உஸ்பெகிஸ்தானின் அப்துவாகிட் நெமடோவ் வீரர் வென்றுள்ளார்.

 3.அதிக கோல் அடித்த வீரருக்கான விருதை‌ ஈராக் வீரர் அலி ஜாசிம் பெற்றார்.

மேலும், ஜப்பான், உஸ்பெகிஸ்தான், ஈராக் ஆகிய அணிகள் இவ்வாண்டு பாரிசில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

2022 யில் பிபா உலக கிண்ண கால்பந்து போட்டி, 2023 AFC ஆசிய கோப்பை கால்பந்து போட்டி, ஃபார்முலா 1, டென்னிஸ் போட்டிகள், உலக நீர்வாழ் சம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றை கட்டார் வெற்றிகரமாக நடத்தி இன்னும் பல சர்வதேச போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.


 ஜே.எம்.பாஸித் - கத்தார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »