Our Feeds


Saturday, May 25, 2024

ShortNews Admin

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் சபைக்கு புதிய உறுப்பினர்கள் 3 பேர் நியமனம்

 

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் சபைக்கு புதிய உறுப்பினர்கள் 3 பேரை  சுகாதார அமைச்சர் ரமெஷ் பத்திரண  நியமித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை சட்டத்திற்கமைய சட்டம், கணக்கியல், முகாமைத்துவம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இருந்து பணிப்பாளர் சபைக்கு சிறந்த நிபுணர்களை பரிந்துரைக்கவும் நியமிக்கவும் அமைச்சருக்கு அதிகாரம் உண்டு.

அதன்படி, பட்டய கணக்காளர் சுஜீவ முதலிகே,  ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் இலங்கை நிர்வாக சேவையின் தரம் 1 இன் சிரேஷ்ட அதிகாரி சுசந்த கஹவத்த பாலித குமாரசிங்க ஆகியோர் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்லவினால் நியமிக்கப்பட்ட மூன்று நிர்வாக சபை உறுப்பினர்கள் இராஜினாமா செய்ததைத் அடுத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

கணக்கியல் துறையைச் சேர்ந்த சுபுல் விஜேசிங்க, சட்டத் துறையைச் சேர்ந்த சட்டத்தரணி மனோஜ் கமகே மற்றும் நிர்வாகத் துறையைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் பிரியந்த சேரசிங்க ஆகியோர் இராஜினாமா செய்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »