Our Feeds

Tuesday, May 28, 2024

ShortNews Admin

தொழிலாளர் சட்டத்தை திருத்த வேண்டாம் என கோரிக்கை!

புதிய தொழிலாளர் சட்டத்திற்கான தற்போதைய முன்மொழிவுகளை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் முறையான ஆலோசனைக்குப் பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச தரம் மற்றும் உரிமைகளை அகற்றுவதன் மூலம் தொழிலாளர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் உத்தேச புதிய சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாவிட்டால், எதிர்காலத்தில் கடும் எதிர்ப்புகள் உருவாகலாம் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புதிய தொழிலாளர் சட்டத்திற்கான தற்போதைய முன்மொழிவுகளை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் முறையான ஆலோசனைக்குப் பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச தரம் மற்றும் உரிமைகளை அகற்றுவதன் மூலம் தொழிலாளர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் உத்தேச புதிய சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாவிட்டால், எதிர்காலத்தில் கடும் எதிர்ப்புகள் உருவாகலாம் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »