தேர்தல் வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை நியாயமற்ற
முறையில் அதிகரித்த எதிர்ப்பு தெரிவித்து முன்னிலை சோசலிசக் கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் நேற்று (7) மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.தேர்தல்களில் போட்டியிடும் உரிமையை செல்வந்தர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தி தேர்தலில் போட்டியிடும் சாதாரண வேட்பாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.