Our Feeds


Friday, May 17, 2024

ShortNews Admin

உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்

 

மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவதற்காக நிலவும் சட்டம் கட்டாயமாக திருத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அதனை பாராளுமன்றத்தின் ஊடாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதமரிடம் சுட்டிக்காட்டியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இது தவிர உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »