Our Feeds


Saturday, May 4, 2024

ShortNews Admin

நாட்டிலுள்ள ஒவ்வொரு பாடசாலையையும் ரோயல் கல்லூரி போன்று மாற்றுவதே நோக்கம்

பொருளாதாரக் குழுக்களுக்கிடையிலான விவாதத்தை நடத்த தேசிய மக்கள்

சக்தி தயங்குவது போல் தெரிகிறது, ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி குழுவாக இரு விவாதங்களுக்கும் தயாராக உள்ளது. இந்த இரண்டு விவாதங்களுக்கும் மே மாதத்திலேயே திகதிகளை ஒதுக்கிக் கொள்ளுமாறும், ஒரு விவாதம் குறித்து மட்டும் பேசி வெறும் வாய்ப் பேச்சு வீரராகதிருக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 170 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் கம்பஹா, மீரிகம, கல்எலிய அலிகார் தேசிய பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 03 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பஸ் மேன் என்று பட்டம் சூட்டியவர்கள் கல்வி கற்ற பாடசாலைகளுக்கும் பஸ்களை வழங்கி வைத்தேன். கண்ணங்கரவின் இலவசக் கல்வி இதன் மூலம் வலுப்பெறும். கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளில் அனைத்து வளங்களும் உள்ளன. இந்நாட்டில் உள்ள 10126 பாடசாலைகளையும் உண்மையாகவே ரோயல் கல்லூரி போன்ற வசதிகள் கொண்ட பாடசாலைகளாக மாற்றுவதே எனது நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

எமது இந்த இலக்கு குறித்து சிலருக்கு பொறாமை ஏற்பட்டுள்ளன. எனவே அவர்கள் வெவ்வேறு பெயர்களை எனக்கு சூட்டி வருகின்றனர். இவ்வாறு பொறாமை கொண்டு பல்வேறு பெயர்களை சூட்டிவரும் தரப்பினரின் பிள்ளைகள் தனியார் பாடசாலைகளிலும், தனியார் பல்கலைக்கழகங்களில் தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நாட்டின் தேசிய கல்வி முறையில் மருத்துவம், சட்டம், பொறியியல், வர்த்தகம் போன்ற துறைகளைத் தவிர்ந்து, கலைத்துறையில் வேலைவாய்ப்புகள் பற்றாக்குறையாக உள்ளதால், இந்த முறையை மாற்றி ஆங்கில வழிக் கல்விக்கு இடமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »