Our Feeds


Friday, May 31, 2024

SHAHNI RAMEES

கிழக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் - இடைக்கால தடை உத்தரவு விதித்தது நீதிமன்றம்

 




கிழக்கு மாகாண பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­க­ளுக்கு நேற்று முன்­தி­னம்

வழங்­கப்­ப­ட­வி­ருந்த நிய­மனம் -கல்­முனை மாகாண நீதி­மன்­றத்­தினால் இடைக்­கால தடை உத்­த­ரவின் மூலம் இடை நிறுத்­தப்­பட்­டுள்­ளது.


இந்த இடைக்­காலத் தடை கடந்த திங்­கட்­கி­ழமை பிறப்­பிக்­கப்­பட்­டது.

இந்த வழக்கு எதிர்­வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி மீண்டும் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. அது­வரை நிய­மனம் எதுவும் வழங்க கூடா­தென பிர­தி­வா­தி­க­ளுக்கு நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.


குரல்கள் இயக்க சட்­டத்­த­ர­ணிகள் மேற்­கொண்ட முயற்­சி­யினால் இந்த இடைக்­காலத் தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வளை கிழக்கு மாகாண கல்வி அமைச்­சினால் வழங்­கப்­ப­ட­வுள்ள பட்­ட­தாரி ஆசி­ரியர் நிய­ம­னத்­திற்­கான தேர்வில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ள கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவை, இதனை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் மகஜர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இதேவேளை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் இவ்விவகாரத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் குறித்த நேர்முகப் பரீட்சையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குளறுபடிகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.


இத­னி­டையே, கிழக்கு மாகா­ணத்தில் புதி­தாக நிய­மிக்­கப்­ப­ட­வி­ருந்த ஆசி­ரியர் நிய­மன சர்ச்சை தொடர்­பாக கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்­ட­மானை திரு­கோ­ண­மலை மாவட்ட பாராளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் சந்­தித்து பேசி­யி­ருந்தார். எந்த ஒரு விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கும் பாதிப்பு இல்­லா­த­வாறு குறித்த ஆசிரியர் நியமனங்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதன்போது கிழக்கு மாகாண ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளார்.


நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடாமல் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டோரின் பெயர்ப் பட்டியல் மாத்திரமே வெளியிடப்பட்டிருப்பது சட்டத்திற்கு முரணானது என- பாதிக்­கப்­பட்­டவர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.


நன்றி- Vidivelli

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »