Our Feeds


Friday, May 31, 2024

SHAHNI RAMEES

இந்தியாவின் குஜராத்தில் கைதான நான்கு சந்தேக நபர்களினது ஐ.எஸ். தொடர்பு இன்னும் உறுதியாகவில்லை


 - இலங்கையின் சி.ஐ.டி, ரி.ஐ. டி.யினரால் தொடர்ந்து

தீவிர விசாரணை முன்னெடுப்பு

- குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தகவல்கள் முரண்படுவதாக தெரிவிப்பு

- பொய்யான தகவல் வெளியிட்ட விரிவுரையாளரும் கைதாகி பிணையில் விடுவிப்பு

( எப்.அய்னா)

இந்­தி­யாவின் குஜராத் மாநி­லத்­தி­லுள்ள அஹ­ம­தாபாத் சர்தார் வல்­லபாய் படேல் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் கைது செய்­யப்­பட்ட இலங்­கையைச் சேர்ந்த நான்கு சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான தீவிர விசா­ர­ணை­களை குற்றப் புல­னாய்வுத் திணைக்­களமும் பயங்­க­ரவாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வி­னரும் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.


தொடர்ச்­சி­யாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில், குறிப்­பிட்ட நான்கு பேரும் ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்பை பேணி வந்­துள்­ளனர் என்­ப­தற்­கான தக­வல்­களே சான்­று­களே இது­வரை உறுதி செய்­யப்­ப­ட­வில்லை. எனினும், போதைப்­பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகச் செயற்­பா­டு­க­ளுடன் தொடர்புபட்­டி­ருந்­தமை தொடர்­பான விட­யங்கள் அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.


அத்­துடன் இந்­திய குஜராத் பயங்­க­ர­வாத தடுப்பு பிரி­வினர் வெளி­யிட்­டுள்ள தக­வல்­களும் இலங்கை பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் வெளி­வந்த தக­வல்­களும் முரண்­ப­டு­வ­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது.


இது இவ்­வா­றி­ருக்க, நான்கு இலங்­கை­யர்கள், குஜராத் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட சம்­ப­வத்தை மையப்­ப­டுத்தி, பொய்­யான‌, மக்­களை அச்­சு­றுத்தும் கருத்­துக்­க‌ளை பொது­வெ­ளியில் வெளி­யிட்­ட­மைக்­காக கொத்­த­லா­வல பாது­காப்பு கல்­லூ­ரியின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி புன்­சர அம­ர­சிங்க பயங்­க­ர­வாத புல­னாய்வு மற்றும் விசா­ரணைப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.


2019 ஆம் ஆண்டு நடந்த உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் விசா­ரித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு, அடிப்­ப­டை­வா­திகள் 300 பேரின் பெயர் அடங்­கிய பட்­டி­யலை தனது பரிந்­து­ரையில் உள்­ள­டக்கி அவர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்க கோரி­யி­ருந்­த­தா­கவும், அப்­பட்­டி­யலில் இருந்த நால்­வரே இந்தி­யாவில் தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் கலா­நிதி புன்­சர அம­ர­சிங்க தனியார் தொலைக்­காட்சி செவ்­வி­யொன்றில் குறிப்­பிட்­டி­ருந்தார்.


இந்த கருத்து தொடர்­பி­லேயே அவரைக் கைது செய்­த­தாக பொலிஸ் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்­துவ குறிப்­பிட்டார். நேற்று முன் தினம் (28) மாலை சி.ரி.ஐ.டி. க்கு அழைக்­கப்­பட்ட கலா­நிதி புன்­சர அம­ர­சிங்க விசா­ர­ணையின் பின்னர் கைது செய்­யப்­பட்­ட­தாக அவர் குறிப்­பிட்டார்.


இந் நிலையில் கைது செய்­யப்­பட்ட கலா­நிதி புன்­சர அம­ர­சிங்க நேற்று (29) கோட்டை நீதிவான் கோசல சேனா­தீர முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டார். இதன்­போது கலா­நிதி புன்­சர அம­ர­சிங்க சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி காலிங்க இந்­ர­திஸ்ஸ மன்றில் ஆஜ­ரானார்.


மன்­றுக்கு பீ அறிக்கை சமர்ப்­பித்த பொலிஸார், சந்­தேக நபர் ஜனா­தி­பதி விசா­ரணைக் குழு அறிக்­கையில் இல்­லாத விட­யங்­களை பொய்­யாக கூறி, மக்­களை பய­மு­றுத்தும் கருத்­துக்­களை பொது வெளியில் பகிர்ந்­துள்­ள­தாக கூறினர். இந்­நி­லை­யி­லேயே சந்­தேக நபர் 10 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சரீரப் பிணையில் விடு­விக்­கப்­பட்டார்.


அத்­துடன், இந்­தி­யாவில் கைதான நான்கு சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை சிவில் பாது­காப்பு அமைச்சும் பாது­காப்பு அமைச்சும் மேலும் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளன. குறிப்­பாக, அந்த நபர்கள் தொடர்பில் குஜராத் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவு முன்­வைத்­துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தி விசாரணைகளை முடுக்கிவிடப்பட்டுள்ளது.


இதற்கமைய கொழும்பு, சிலாபம் பகுதிகளில் கைதுகள் இடம்பெற்றுள்ளதுடன் குறிப்பட்ட நான்குபேரினது வலையமைப்புகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


நன்றி- Vidivelli

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »