Our Feeds


Wednesday, May 22, 2024

ShortNews Admin

தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் தமீம் ரஹ்மான் கைது !


LPL இல் பங்கேற்கவுள்ள தம்புள்ளை தண்டர்ஸ் அணியுடன் தொடர்புடைய தமீம் ரஹ்மான் என்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு ஒன்றின் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவினரிடம் இவர் ஒப்படைக்கப்பட்டு, அதன் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

"மெட்ச் பிக்சிங்கை பரிந்துரைக்க முயன்றதாக" சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »