Our Feeds


Saturday, May 18, 2024

SHAHNI RAMEES

தலைவர் ஹக்கீமுக்கு முடியாத விடையத்தை ஹரீஸ் எம்பி சாதித்து காட்டியுள்ளார்.


 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்

அவர்களினால் முடியாத விடையத்தை ஹரீஸ் எம்பி சாதித்து காட்டியுள்ளார்.



 வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அகமட் அவர்களின் வாழ்த்து செய்தி 



மிக நீண்ட காலமாக கிழக்கு மக்களின் உரிமைகளையும் அபிவிருத்திகளையும் தங்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும். அதுவும் எமது கட்சியின் ஊடாக மாத்திரமே செய்ய முடியும் என்றும் தம்பட்டம் அடித்து கட்சியில் இருக்கும் யாராவது தன்னை முந்திக்கொண்டு ஏதாவது அபிவிருத்தி பணிகளை அல்லது உரிமை சார்ந்த விடயங்களை முன்னெடுத்து விடுவார்களேயே ஆனால் அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதும் அவர்களை சவாலுக்கு உட்படுத்துவதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கடந்த காலம் தொடக்கம் இன்று வரைக்குமான செயல்பாடு ஆகும். அதனை மீறி இன்று கல்முனையின் காவலன் என்று செல்லமாக அழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினரும் எனது நண்பருமான ஹரிஸ் எம்பி அவர்கள் முயற்சியின் பலனாக நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் எமது மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸரப் அவர்களின் நியாபகத்தில் அன்னாரின் பெயரில் அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியம் ஜனாதிபதியின் 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணம் செய்யப்பட உள்ளது.  இதுவரை காலமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியில்  தற்போது இருக்கும் ரவூப் ஹக்கீம் அவர்களின் ஊடாக முஸ்லிம்களின் உரிமைகள் எதாவது நிறைவேற்றப்பட்டுள்ளதா! என்று சிந்திக்க வேண்டிய தருணம்.   


இவை அனைத்து சவால்களையும் முறையடித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஷ் அவர்கள் மேற்கொண்டிருக்கும் இப்பணி மகத்தானதும் வரவேற்கத்தக்கதுமாகும். 


அண்மை காலம் தொடக்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அவர்களை நம்பி இருக்கும் செயற்பாட்டில் இருந்து அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிவர தொடங்கி தமது பிரதேச மக்களின் அபிவிருத்திகளிலும் உரிமைகளிலும் அரசுடன் போராடி தனது உரிமைகளை வென்றெடுக்க முன்வந்துள்ளது மிகவும் சிறப்பான விடயமாகும்.


எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்(JP)

செயலாளர் 

ஜனநாயக ஐக்கிய முன்னணி(கல்குடா)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »