Our Feeds


Friday, May 10, 2024

ShortNews Admin

மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு


 கந்தானை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத காலாவதியான உணவுப்பொருட்கள் ஜா-எல பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, மனித பாவனைக்கு உதவாத காலாவதியான 1,769 கிலோ கிழங்கு, 732 கிலோ வெங்காயம், 2,600 கிலோ கடலை, 29 கிலோ பருப்பு, 20 கிலோ அரிசி, 3 கிலோ மஞ்சள் மற்றும் 150 கிலோ உளுந்து உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த உணவுப் பொருட்களானது கடந்த 7 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ள நிலையில் உதவியாளர் ஒருவர் மூலம் இந்த உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »