Our Feeds


Friday, May 10, 2024

ShortNews Admin

உலகளாவிய முதலீட்டு உச்சி மாநாடு – இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ்

DIGIECON-2023 திட்டத்துடன் இணைந்து நடத்தப்படும் DIGIECON உலகளாவிய முதலீட்டு உச்சி மாநாடு – 2024 (DIGIECON Global Investment Summit) என்பது இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு ஒரு சிறப்பான வாய்ப்பாகும் என்று தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டின் மூலம் பல வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்கு பெற்றுக் கொள்ள முடியும் எனவும், இதன் மூலம் தகவல் தொழிநுட்ப துறையின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு உயர் பங்களிப்பை வழங்க முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்கும் “DIGIECON 2023” திட்டத்துடன் இணைந்தாக இலங்கை தொழில்நுட்ப அமைச்சினால் நடத்தப்படும் DIGIECON உலகளாவிய முதலீட்டு மாநாடு குறித்து தெளிவுபடுத்தும் ஊடாக மாநாடு இன்று (10) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவிக்கும் போதே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனைக் குறிப்பிட்டார்.

“DIGIECON-2023” திட்டத்துடன் இணைந்ததாக நடைபெறவுள்ள DIGIECON உலகளாவிய முதலீட்டு மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு டிஜிட்டல் முதலீட்டு மாநாட்டை நடாத்துவதன் மூலம் இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள DIGIECON திட்டத்தை மேலும் விரிவுபடுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இதன் மூலம் தகவல் தொழிநுட்பத் துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களும் பாடசாலை மாணவர்களும் தமது துறையில் முன்னேற சிறந்த வாய்ப்பு உள்ளது.

இந்த மாநாட்டின் மூலம் இலங்கையை சர்வதேச ரீதியில் கொண்டு செல்ல எதிர்பார்க்கிறோம். இதன்படி சர்வதேச சமூகம் இந்நாட்டில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். இத்திட்டங்கள் மூலம் நமது நாட்டில் உள்ள விசேட திறமை கொண்ட இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »