ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ்
அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.அஜர்பைஜானின் மலை பாங்கான பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அதிக மழை மற்றும் காற்று உள்ளிட்ட சீரற்ற வானிலை காரணமாக இவ்வாறு ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அந்த ஹெலிகொப்டரில் பயணித்த ஈரானிய ஜனாதிபதி உள்ளிட்ட எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வௌிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
