Our Feeds


Monday, May 20, 2024

SHAHNI RAMEES

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு? l ஜனாதிபதிக்கு அவசரமாக சென்ற கடிதம் (கடிதம் இணைப்பு)

 



பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு, மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே, மகா நாயக்க தேரர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.



கூரகல ரஜமகா விஹாரை தொடர்பில் 2016ம் ஆண்டு இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக தெரிவித்து, ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு, நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


நாட்டிலுள்ள சிங்கள பௌத்த மக்களுக்காக ஞானசார தேரர் கடந்த காலங்களில் குரல் எழுப்பியிருந்ததாகவும், இனவாத குழுக்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரிவிற்கு தகவல்களை வழங்கியிருந்ததாகவும் மகாநாயக்க தேரர்கள் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.


நாட்டில் பரவிய இனவாதத்தை இல்லாது செய்ய அவர் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


இந்த நிலையில், குறித்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு, மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »