Our Feeds


Saturday, May 25, 2024

ShortNews Admin

PHOTOS & VIDEO: பாலஸ்தீன விடுதலை மாநாட்டு தீர்மானத்தை பாராளுமன்றில் Hansard பதிவுக்கு சமர்பிப்பேன் - காத்தான்குடி மாநாட்டில் அலி-ஸாஹிர் மௌலானா அறிவிப்பு

 


பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வமான தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற “காத்தான்குடி, பாலஸ்தீன விடுதலை மாநாட்டு தீர்மானத்தை” பாராளுமன்றில் Hansard பதிவுக்கு சமர்பிப்பேன் என காத்தான்குடியில் 'We are one' அமைப்பு நடத்திய மாநாட்டில் மு.க பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா அறிவிப்பு.


'We are one' அமைப்பு நடத்திய பாலஸ்தீன விடுதலை மாநாடு நேற்றைய தினம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் பெரும் திரளான மக்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது. 


'We are one' அமைப்பின் தலைவர் சுரேன் சந்திரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அஷ்ஷெய்க் சஜீர் உஸ்வி, அஷ்ஷெய்க் ஹைதர் அலி அல்-ஹலீமி, அஷ்ஷெய்க் அப்துர் ரஹ்மான் உஸ்வி ஆகியோர் உரையாற்றியதுடன் பாலஸ்தீன விடுதலை ஏன்? எதற்கு? என்ற தலைப்பில், சகோதரர் ரஸ்மின் MISc சிறப்புரையாற்றினார். 


குறித்த நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ் மற்றும் மு.க பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலான ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 


நிகழ்வின் இறுதியில் “பாலஸ்தீனம் தனி நாடாக ஐ.நா வினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்ற சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், குறித்த தீர்மானத்தை பாராளுமன்றில் Hansard பதிவுக்கு சமர்பிப்பேன் என நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலான அவர்கள் மக்கள் மத்தியில் உறுதியளித்தார்.


 









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »