Our Feeds


Tuesday, June 11, 2024

SHAHNI RAMEES

கினிகத்தேனையில் கோர விபத்து 10 பேர் காயம்

 

கினிகத்தேனை - தியகல வீதியில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது.

தனியார் பஸ் ஒன்று வேன் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த 8 பேரும் வேனில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »