ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல அமைப்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.
இவர்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வடமேற்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்ட வடமேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்கவும் ஒருவர்.
பிங்கிரிய தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் சமந்த பிரதீப் குமாரவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச அவர்கள் அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நியமித்தார்.
அதுமட்டுமல்லாமல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தொகுதியின் அழைப்பாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தொகுதியின் முன்னாள் பிரதம அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்துல் மஜீத் அவர்களும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த கொண்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரை பொத்துவில் தொகுதியின் இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.