Our Feeds


Wednesday, June 5, 2024

ShortNews Admin

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

 

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி 296 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அணி 296 இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து மத்தியில் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.

புதிய ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி தனித்து 240 இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும்.

எனவே பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை பாரதிய ஜனதா கட்சி இன்று கூட்டியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோல் காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »