முறைசாரா முறையில் தீர்வுகளை வழங்காமல், முழுமையாக இதனை அனுகி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகளை வழங்க வேண்டும். இந்த தீர்வுகளை வழங்குவதில், சிலருக்கு பாதகமான விடயங்கள் நடக்கலாம், ஆனால் அவர்களும் நிம்மதியடைந்து ஒவ்வொரு ஆண்டும் எதிர்கொள்ளும் இந்த வெள்ள சூழ்நிலையிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். தற்காலிக தீர்வுகளை வழங்குவதற்கு பதிலாக நீண்டகால தீர்வுகளை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பழைய சுற்றறிக்கைகளின் கீழ் சொற்ப நிவாரணங்களை வழங்காமல் மக்களுக்கு பயனுள்ள விதமாக நிவாரணம் வழங்க அரசு தலையிட வேண்டும். தானும் தனது குழுவும் பல்வேறு தரகர்களின் அடிமைகள் அல்லர் என்றும் ஊழல் மோசடிகளில் நாம் ஈடுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ பிரதேசத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று(04) விஜயம் செய்தார்.
களனி கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால் இந்தப் பகுதியில் உள்ள ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் கேட்டறிந்தார்.