(ஹஸ்பர் ஏ.எச்)
திருகோணமலை கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலயத்தில் தரம் ஜந்தில் கல்வி பயிலும் செல்வன் ரமேஷ் இத்திக்க உதார எனும் மாணவன் கடந்த (14-06-2024) அன்று பாடசாலையில் மாலை நேர வகுப்பு முடிவடைத்து வீட்டுக்குச் செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அந்த மாணவனை தாக்கியுள்ளனர்.
இச் சம்பவத்திற்கு நீதி கோரி இன்று புதன்கிழமை காலை (19) அப்பகுதி மக்களும் மாணவர்களும் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற இடத்திற்கு திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளரும் , பொலிஸாரும் வருகைதத்தமை குறிப்பிடத்தக்கது.