Our Feeds


Sunday, July 28, 2024

Zameera

சுதந்திரக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை 31ஆம் திகதி அறிவிக்கும்


 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படுத்தும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடவில்லை எனவும், தற்போது ஒரேயொரு சட்டபூர்வமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது கையில் இருப்பதாக சிலர் கூறுகின்ற கருத்துக்கள் செல்லுபடியாகாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »