Our Feeds


Thursday, July 18, 2024

Sri Lanka

தோழியின் பெயரை பேஸ்புக்கில் பகிர்ந்து குற்றம்சாட்டிய 3 பிள்ளைகளின் தாய் தற்கொலை - நடந்தது என்ன?



தனது நண்பிக்காக வங்கியில் இருந்து கடனாக பெற்று கொடுத்த பணத்தினை மீள செலுத்த முடியாதமையால் மனமுடைந்த குடும்ப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். 


யாழ்ப்பாணம், அல்வாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் .


இரு பெண்களுக்கு இடையில் நீண்ட கால நட்பு இருந்து வந்துள்ளது. அதில் ஒரு பெண் பண கஷ்டத்தில் இருந்த போது மற்றைய பெண் வங்கியில் பெருந்தொகை பணத்தினை கடனாக பெற்று, தனது நண்பிக்கு பண உதவி செய்துள்ளார். 


பண உதவியை பெற்றுக்கொண்ட பெண், பணத்தினை மீள செலுத்தாத நிலையில், வங்கியில் கடன் பெற்ற பெண், பண நெருக்கடிக்கு ஆளாகி , மனவுளைச்சலில் காணப்பட்டுள்ளார். 


இந் நிலையில் முகநூலில் நண்பியின் பெயரையும், தனது மரணத்திற்கு காரணம் இவர் தான் என்றும் இவரால் தான் தனது மூன்று பிள்ளைகளையும் அநாதையாக விட்டு செல்வதாகவும் பதிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் .


எம். றொசாந்த் 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »