Our Feeds


Saturday, July 13, 2024

Admin

ஜனாதிபதித் தேர்தல் இடைநிறுத்தம் - திங்களன்று மனு மீதான விசாரணை !



ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதை நிறுத்துமாறு கோரியும், அதனை முறையாக நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறும் கோரி, சட்டத்தரணி அருண லக்சிறி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படாததால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதை நிறுத்துமாறு கோரியும், அதனை முறையாக நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறும் கோரி, சட்டத்தரணி அருண லக்சிறியால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூலை 15 ஆம் திகதி திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தின் 3 நீதியரசர்கள் கொண்ட அமர்வில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »