Our Feeds


Saturday, July 20, 2024

Admin

மு.க செயலாளரின் “அந்த கல்முனைக்குடி நாட்கள்” நூல், கல்முனை வரலாற்றையும், கௌரவத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது | மு.க பிரதித் தலைவர் ஹரீஸ் MP

 


உங்களின் நூல் வெளியீட்டில் கலந்துகொள்வதனூடாக கல்முனை மண்ணின் நீண்ட , நெடிய வரலாற்றையும், தொன்மையையும், புகழையும், கௌரவத்தையும் நான் கேள்விக்குட்படுத்த விரும்பவில்லை. என முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹரீஸ் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பருக்கு உத்தியோகபூர்வமாக பதிலளித்துள்ளார்.


மு.க செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் எழுதிய “அந்த கல்முனைக்குடி நாட்கள்” எனும் கவிதை நூல் இன்று கொழும்பு, பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டது. 


குறித்த நூல் வெளியீட்டில் மு.க தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பலரும் வருகை தந்த நிலையில் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மேற்கண்டவாரு பதிலளித்துள்ளார். 


அது தொர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


கவிதை நூலுக்கும் வரலாற்றுக்கும் தொடர்புபடுத்தக் கூடாது என்ற கருத்துக்கள் வந்தாலும் பல காவியங்கள் வரலாராகியிருக்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். “அந்த கல்முனைக்குடி நாட்கள்” என்ற உங்களின் கவிதை நூலின் தலைப்பு மாற்றப்பட வேண்டும். 


எனவே, இந்த நூல் வெளியீட்டில் நான் கலந்துகொள்வதின் மூலம் கல்முனை மக்களின் உணர்வுகளை மதிக்காத, கல்முனை மண்ணின் மாண்பில் அக்கறை கொள்ளாத ஒருவன் என கல்முனை மக்கள் என்னை பிழையாக எண்ணி விடுவார்கள்.  


உங்களின் நூல் வெளியீட்டில் கலந்துகொள்வதனூடாக கல்முனை மண்ணின் நீண்ட , நெடிய வரலாற்றையும், தொன்மையையும், புகழையும், கௌரவத்தையும் நான் கேள்விக்குட்படுத்த விரும்பவில்லை.  








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »