ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் ஒரு லீட்டர் பெட்ரோல் 150 ரூபாவிற்கு கொண்டு வரப்படும் என சிலர் கூறினாலும் அதனை நிறைவேற்ற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகின்றார்.
150க்கு பெட்ரோல் தருவதாகச் சொல்லவில்லை, அது சாத்தியமில்லை என்றார்.
150 ரூபாய்க்கு பெட்ரோல் தருவதாக கூறி வாக்குகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்த அவர், அந்த தொகைக்கு எத்தனை நாட்களுக்கு பெட்ரோல் வழங்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்று 24 மணி நேரமும் மின்சாரம் இருப்பதாகவும், எரிபொருள் எரிவாயு வரிசைகள் இல்லை எனவும், அதனை கபடமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Wednesday, August 14, 2024
150க்கு பெட்ரோல் தருவதாகச் சொல்லவில்லை, அது சாத்தியமில்லை - ஹர்ஷ டி சில்வா
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »