உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டெம்பர் 09 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரை கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பான வேட்புமனுக்கள் காலி மாவட்ட செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று (26) முதல் செப்டெம்பர் 11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்த முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு எல்பிட்டிய பிரதேச சபைக்குப் பொறுப்பான தேர்தல் அதிகாரியினால் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.