கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நாடு பாதாளத்துக்கு சென்றுள்ளது எனவே சஜித்தை ஆதரியுங்கள் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான ரிசார்ட் பதியுதீன் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா பட்டானிச்சூரில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது,
எதிர்வரும் ஐந்து வருடம் என்பது ஒரு முக்கியமான காலமாகும். இந்த நாட்டை கோட்டாபய ராஜபக்ஷ அந்தாள பாதாளத்துக்கு கொண்டு போயிருக்கிறார். கை மேல் கையேந்துகின்ற நிலைமைக்கு எமது நாடு வந்துவிட்டது.
மக்கள் கஷ்டத்தில் வாழுகின்றனர் அதேபோன்று விவசாயிகளும் வாடுகின்றனர். இங்கே நிறைய தேவைகள் ஏற்பட்டுள்ளது, நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சஜித் பிரேமதாசாவோடு நிறைய படித்த ஆற்றல் உள்ளவர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் இருக்கின்றனர். அத்துடன் இந்த நாட்டை கட்டி எழுப்பக்கூடிய வல்லவர்களும் இருக்கின்றார்கள்.
எனவே சஜித் பிரேமதாசா வெல்ல வேண்டும். அதன் ஊடாகத்தான் இந்த நாட்டினுடைய பொருளாதாரம் பெரும் எழுச்சியுடனும் வறுமைகள் நீங்கி தேவைகளை நிறைவேற்றித் தரக்கூடிய வல்லவராக சஜித் பிரேமதாசா இருக்கின்றார் என தெரிவித்தார்.
Monday, August 26, 2024
கோட்டாபயவின் ஆட்சிக்காலத்திலே நாடு பாதாளத்துக்கு சென்றது - ரிசார்ட் பதியுதீன்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »