இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
முடிந்த நிலையில், தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தந்தார். நேற்று ஆதரவு கேட்ட வந்த நிலையில், இன்று மீண்டும் வந்தார். அப்போது தவெகவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளது. இதன் மூலம் தவெக கூட்டணியின் பலம் 114 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 4 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை உள்ளது.தவெக தலைவர் விஜய் இன்று மாலை 6.30 மணிக்கு கவர்னரை சந்திக்க இருப்பதாக தகவல் பரவும் நிலையில், ஆதரவு கடிதத்தை தவெக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
