Our Feeds


Friday, May 8, 2026

Zameera

நிலக்கரி குறித்த விசாரணைகளை ஆரம்பித்த ஜனாதிபதி ஆணைக்குழு


 2009 ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நிலக்கரி இறக்குமதி தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முதற்கட்ட விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


இந்த ஆணைக்குழு கொழும்பு 12, நீதிமன்ற மாவத்தை, சாஞ்சி ஆராச்சி வத்தை, நீதிமன்ற பியச, நீதவான் நீதிமன்ற வளாகத்தின் 5 ஆம் மாடியில் நிறுவப்பட்டுள்ளது. 


இதற்கமைய, இந்த விடயம் தொடர்பாக பொதுமக்களிடமோ அல்லது நிறுவனங்களிடமோ உள்ள தகவல்களை மே மாதம் 22 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. 


2009 ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி வரை நிலக்கரி இறக்குமதி செய்தமை, அந்த நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்தமை மற்றும் அது தொடர்பான ஏனைய அனைத்து செயற்பாடுகளிலும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »