Our Feeds


Friday, May 8, 2026

Zameera

கபில சந்திரசேனவின் மரணம் சந்தேகத்திற்குரியது


 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் சந்தேகத்திற்குரியது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 


கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 


அத்துடன், கபில சந்திரசேனவிற்கு பிணை வழங்குவதற்காக வருகை தந்த நபர்கள் தொடர்பிலும் சந்தேகம் நிலவுவதாக சாகர காரியவசம் குறிப்பிட்டார். 


குறித்த பிணையாளர்களை முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு அறிமுகப்படுத்தியது இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளா? என்பது குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுச் செயலாளர் மேலும் கோரிக்கை விடுத்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »