வத்தளை இஸ்மத் என்பவருக்கு எதிராக உலமா
சபை தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம்.அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைமைப் பொறுப்புகளுக்கான தேர்தல் நேரத்தில் உலமா சபை தொடர்பில் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டதாக கூறி Online Safety Act - ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொழும்பு, பிரதான நீதிவான் நீதிமன்றில் வத்தளையை சேர்ந்த இஸ்மத் என்பவருக்கு எதிராக உலமா சபை தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், நீதி மன்றம் குறித்த வழக்கை தள்ளுபடி (Case Dismissal) செய்து உத்தரவிட்டுள்ளது.
