Our Feeds


Friday, May 8, 2026

Zameera

இலங்கை – வியட்நாம் நேரடி விமான சேவை இந்த ஆண்டில் ஆரம்பம்


 வியட்நாம் எயார்லைன்ஸ் இந்த ஆண்டுக்குள் இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் நேரடி விமானச் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (08) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் உடன் இணைந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு வர்த்தகம் 2030ஆம் ஆண்டளவில் 1 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, அனைத்துத் துறைகளிலும் இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த வியட்நாம் விருப்பம் கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி டோ லாம் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »