சூடானின் வடக்கு டாா்பா் மாகாணத்தில் இராணுவத்துக்கும் துணை இராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 28 போ் உயிரிழந்துள்ளனர்.
மாகாணத் தலைநகா் எல் பாஷரில் ஆா்.எஸ்.எப் துணை இராணுவப் படை நடத்திய இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 28 போ் உயிரிழந்துடன் 46 போ் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இரு படைகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றுவருகிறது. இதில் இதுவரை சுமாா் 15,000 போ் வரை உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.