இ.தொ.கா வின் கன்னி தேர்தல் பிரசாரம் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பம்பிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளதுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் 9ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதனையொட்டி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க கடந்த18ஆம் திகதி இ.தொ.காவின் தேசிய சபை ஒன்றுகூடி ஏகமனதாக தீர்மானித்தது.
அதனை தொடர்ந்து எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கைச்சாத்திடப்படவுள்ளது.
மேலும் 2024 ஜனாதிபதி தேர்தலின், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கன்னி தேர்தல் பிரசார நடவடிக்கைள் எதிர்வரும் 30ம் திகதி முதல் ஆரம்பிக்கபடவுள்ளதாக தெரிவித்தார்.
எமது நாட்டின் இக்கட்டான பொருளாதார நெருக்கடியில் நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதியை அதிகப்படியான வாக்குகள் மூலம் மீண்டும் வெற்றிபெற செய்வோம் நாங்கள் அனைவரும் ஒரணியாக திகழ்வோம் என இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
Sunday, August 25, 2024
இ.தொ.கா வின் கன்னி தேர்தல் பிரசாரம் 30ஆம் திகதி ஆரம்பம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »