Our Feeds


Sunday, August 25, 2024

Zameera

சாரதி அனுமதிப் பத்திரங்கள் ரத்து செய்யப்படாது


 புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களையும் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், அவ்வாறு எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்தார்.

இதுவரை புதுப்பிக்கப்படாத சுமார் 2 மில்லியன் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை புதுப்பிப்பதற்காக புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்கான அனைத்துப் பணிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (23) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1960 களில் இந்நாட்டின் முதல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டதிலிருந்து, சுமார் 12.3 மில்லியன் சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரஞ்சித் ரூபசிங்க இதன்போது குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »