Our Feeds


Tuesday, August 6, 2024

Admin

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு நாளை!


பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பை தாமரை தடாகம் திரையரங்கில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் முறையான அனுமதி கிடைக்காமையால் பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.


பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நாளை 7ஆம் திகதி காலை 7:00 மணிக்கு நடைபெறவுள்ளதாக மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன ஆரம்பத்திலே கூறியது போன்று கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளரை முன்வைக்கும் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படாதென மிலிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »