ஒரே மேடைக்கு வாருங்கள், ஒப்பந்தங்களை தெளிவூட்டுங்கள். - முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கு சமூக செயல்பாட்டாளர் சகோதரர் ரஸ்மின் அவர்களினால் பகிரங்க அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுத்தீன், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் பிரதித் தவிசாளர் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு முகவரியிடப்பட்டுள்ள குறித்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
•ஜனாதிபதி தேர்தல் - கண்மூடித்தனமாக இன்னுமொரு முறை ஏமாறப் போகிறோமா? அல்லது தெளிவாக முடிவெடுக்கப் போகிறோமா?
•இதுவரை காலமும் நமது கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் போட்ட ஒப்பந்தங்களுக்கு நடந்தது என்ன?
•கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதா?
•கோரிக்கைகளை நிறைவேற்ற நம் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்ன?
•இம்முறை ஒவ்வொரு கட்சியும் போட்ட போடவுள்ள ஒப்பந்தங்கள் என்ன?
•அதை எப்போது? எப்படி நிறைவேற்றுவார்கள்?
•நேரடியாக மக்களுக்கு தெளிவூட்ட நமது கட்சித் தலைவர்கள் முன்வருவார்களா?
•கட்சி பேதம் மறந்து, கடமை உணர்வோடு சமூகத்திற்காய் சிந்திப்போம் - தலைவர்களை ஒரே மேடைக்கு அழைப்போம்.
அன்புடன்,
ரஸ்மின் MISc