எனது அரசியல் அணியில் உள்ளவர்கள் அரசியல் நலனிற்காக கட்சிதாவலில் ஈடுபடாதவர்கள் என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எனது அணியில் உள்ளவர்கள் மதுபானசாலை அனுமதிப்பத்திரம்,காணி உறுதிப்பத்திரம்,பணம் போன்றவற்றிற்காக கட்சிதாவாதவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் இலாபங்களிற்காக இரகசிய உடன்பாடுகளில் ஈடுபடுவதை அனுமதிப்பதில்லை என்பது கட்சியின் கொள்கை,கட்சியின் உறுப்பினர்களிற்கும் தனிநபர்களிற்கும் இது பொருந்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு ஏதாவது கிடைத்தால் அதனை நாங்கள் மக்களின் நன்மைக்காக பயன்படுத்துவோம்,எனவும் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தாலும் சரி பணத்தை பயன்படுத்தி எவரையும் வாங்கமாட்டோம்,அவ்வாறானவர்கள் எங்களுடன் இணைந்து செயற்பட அனுமதிக்கமாட்டோம்,அவ்வாறான நபர்கள் எங்கள் பக்கத்தில் இல்லை என எதிர்கட்சி தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Thursday, August 15, 2024
அரசியல் நலனிற்காக கட்சி தாவுபவர்கள் எங்கள் கட்சியில் இல்லை - சஜித்
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »