கண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா மாளிகை பெரஹராவை குறிக்கும் வகையில் தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உலகில் மிக நீளமான முத்திரையான 205 மி.மீ நீளமான நினைவு முத்திரை சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
அத்தோடு புராதன சடங்குகளை மதித்து வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் நான்கு விகாரைகளின் வருடாந்த எசல மகா பெரஹரா மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டதாக அறிவிக்கும் தூதுப் பத்திரத்தை தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல,இன்று (20) பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தார்.