பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள
பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர், இரத்தினபுரி மாவட்ட மக்கள் தனக்களித்த ஆதரவுக்காக நணடறியையும் தெரிவித்தார்.ரணிலும் சஜித்தும் இணைந்து நாட்டை முன்னேற்றக்கூடிய ஒரு திட்டத்தை தான் உட்பட்ட தரப்பு முன்வைத்தபோதும் அது சாத்தியப்படாமை குறித்து தனது உரையில் கவலை வெளியிட்டார் தலதா.
சஜித் ஆட்சிக்கு வந்தால் கோட்டாவின் ஆட்சியை போன்றதாகி விடுமென்றும் தலதா தனது உரையில் குறிப்பிட்டதுடன் கோட்டாவின் ஆட்சி எப்படி வீழ்ந்தது என்பதை சஜித் அறியமுயலவேண்டுமென்றும் குறிப்பிட்டார்.