சிரியாவில் உள்ள ஹமா நகரிலிருந்து கிழக்கே 28 கிலோமீற்றர் தொலைவில் 5.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சிரியாவின் தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு 3.7 ரிச்டர் அளவில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. எனினும் மக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய நிலநடுக்க மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.