நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களுகங்கை மற்றும் குடா கங்கையின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“கடந்த 2 - 3 நாட்களாக பெய்து வரும் அடைமழையால், களு கங்கைப் மற்றும் அத்தனகலு பகுதி நிலங்கள் வெள்ள அபாயத்தில் உள்ளன. ஆனால் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி இல்லாவிட்டாலும், களுகங்கையின் குடா கங்கையின் உபகுளங்களிலும், அத்தனகலு ஓயாவிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் குகுலே கங்கை நீர்மின் நிலையத்திலிருந்து திறந்துவிடப்படும் நீர் கொள்ளளவு வினாடிக்கு 25 கனமீட்டராக குறைந்துள்ளது.
ஆனால் குடா கங்கைப் படுகையில் தாழ்வான பகுதிகளைச் சுற்றியுள்ள வீதிகள் இன்னும் வௌ்ள நிலையிலேயே காணப்படுகின்றது. எனவே, தாழ்வான பகுதிகளில் வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். "
Monday, August 19, 2024
தொடரும் வெள்ள நிலை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »