ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோருக்கு எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச விடுத்திருந்த அழைப்பின் பேரில் பாராளுமன்ற கட்டித்தொகுதியில் இன்று (21) இருவரும் சஜித் பிரேமதாசவை சந்தித்து சமகால அரசியல் சூழ்நிலைகள் சம்பந்தமாக கலந்துரையாடினர்.
இதன்போது கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள், சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவிடம் எடுத்துரைத்திருந்தனர்.
இங்கு கலந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்கள் தொடர்பில் பல விடயங்களை வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நூருல் ஹுதா உமர்