தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை. ஒரு போதும் இனவாதம் பேச மாட்டோம். பொது பல சேனாவின் மஹரகம மேடையில் இருந்த ஷம்பிக்க ரணவக்கவும், திலங்க சுமத்திபாலவும் இப்போது சஜித்தின் மேடையில் இருக்கிறார்கள். இனவாதத்தை தூண்டி ஒருபோதும் அரசியல் செய்ய மாட்டோம். இப்படியான ஒரு இனவாதமற்ற கட்சி நமக்கு வேண்டாமா? என அனுரகுமார திஸாநாயக்க கேள்வி.
நேற்று கொழும்பில் முஸ்லிம் சகோதரர்களுடன் அனுரகுமார நடத்திய நிகழ்விலேயே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தாடி வைக்க விடமாட்டோம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இங்கு நானே தாடி வைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். 5 நேரம் தொழ விடமாட்டோம் என பிரச்சாரம் செய்கிறார்கள். எல்லாமே பொய்.
ஒருவரின் நம்பிக்கையை தடுப்பதற்கு நாம் யார்? நாங்கள் நாட்டு மக்களுக்கு சிறந்த வாழ்வை கொடுப்பவே வருகிறோம்.