தந்தையின் உடலில் பச்சை குத்துவதற்காக வந்த கலைஞர் ஒருவர் அவரது 14 வயது மகளை அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பேருவளை பண்டாரவத்தை பிரதேசத்தை சேர்ந்த சிறுமியின் தந்தை செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும் மகள் தந்தையுடன் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (2) காணாமல் போன மகள் உறவினர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து மொரட்டுவைக்கு தான் அழைத்து வரப்பட்டதாகக் கூறியுள்ளார்.
பொலிஸாரின் விசாரணையின் போது, மொரட்டுவை, உஸ்வத்தையில் உள்ள பச்சை குத்தியவரின் வீட்டில் தான் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் குறித்த சிறுமியை களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் விசேட வைத்திய பரிசோதனைக்காக அனுமதித்தனர்.