Our Feeds


Wednesday, September 18, 2024

Admin

24 மணிநேரத்தில் 156 தேர்தல் முறைப்பாடுகள் - தேர்தல் ஆணைக்குழு!


ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 156 முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், ஜூலை 31ஆம் திகதியில் இருந்து செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை 4, 737 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதில் 1,438 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 3,299 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இந்தக் காலப்பகுதியில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 31 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரையில் தங்களது கிடைக்கப்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 4,209 முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வு கண்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எஞ்சிய 528 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »