இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ. ஜெய்சங்கர் எதிர்வரும் நான்காம் திகதி இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
முன்னதாக அனுரகுமார திசநாயக்க புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை ஜெய்சங்கர் அவரை சந்தித்திருந்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்கள்குறித்து ஆராயப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.